க்ரைம்
Now Reading
பாஜக பிரமுகர் இறப்பில் விலகிய மர்மம்!
0

பாஜக பிரமுகர் இறப்பில் விலகிய மர்மம்!

by Sub EditorFebruary 4, 2017 11:31 am

பாஜகவின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து கடந்த 27ஆம் தேதி அதிகாலை வீட்டிற்கு பின்புறம் உள்ள மாட்டு தொழுவம் அருகில் ஒரு மரத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். அவரது வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டு கைகள் கட்டப்பட்டிருந்தன.

மேலும், அவர் தூக்கிட்ட மரத்தின் அருகேயுள்ள ஒரு கம்பத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் மற்றும் இந்து முன்னணி, பாஜக கொடியும் கருப்பு கொடி இருந்தது. செருப்பு மாலையும் போடப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் 1,2,3,4,5 என எழுதப்பட்டு அதில் 3 என்பது அடிக்கப்பட்டும் இருந்தது. இதையடுத்து மாரிமுத்துவை சிலர் அடித்து கொலை செய்துவிட்டதாகவும், மேலும் பலரை கொலை செய்யதிட்டமிட்டிருப்பதாகவும் சிலர் கூறி பதற்றத்தை ஏற்படுத்தினர். இதனையடுத்து மாரிமுத்துவை மர்ம கும்பல் கொலை செய்து விட்டதாக உறவினர்களும், பா.ஜனதா நிர்வாகிகளும், இந்து முன்னணி தலைவர்களும் குற்றம்சாட்டினர்.
திருப்பூர் சென்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், தமிழகத்தில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதாக கண்டனம் தெரிவித்திருந்தார். இக்கொலைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக பாஜக அறிவித்திருந்தது. மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாரிமுத்து குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற திட்டமிட்டிருந்தார்.

இது குறித்த விசாரணையில், இறந்து போன மாரிமுத்துவுக்கும், பக்கத்து வீட்டு பெண் ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த விஷயம் மனைவிக்கு தெரியவே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாரிமுத்து, தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலையை மறைப்பதற்காக மனைவியும், உறவினரும் சேர்ந்து மோடி படத்துக்கு மாலைபோட்டதும் அம்பலமாகி உள்ளது. தற்கொலையை திசை திருப்புவதற்காக பிரதமர் மோடிக்கு செருப்பு மாலை அணி வித்த 2 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையில் இந்தக் கொலைக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக வருகை தரவிருந்த மத்திய பொன்.ராதாகிருஷ்ணன் வருகையை தவிர்த்துவிட்டார்.

இந்துக்களுக்கு எதிரான கொலை, பாஜகவுக்கு எதிரான தீவிரவாத செயல் என்றெல்லாம் பேசப்பட்ட இந்த சாவு, தகாத உறவினால் நிகழ்ந்த சாவு என்பது கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளது. எந்தவொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்காமல் அவசரப்பட்டு அறிக்கைகள் விடுவதோ, கண்டனம் தெரிவிப்பதோ பொதுமக்களை தவறான வழிக்கு அழைத்துச்சென்று விடும். அதை கேட்கும் மற்றவர்களும் அதைப்பற்றி யோசிக்காமல், எதிர்ப்பை காட்டி விமர்சிப்பதும் தேவையில்லாத கலவரத்திற்கு வழிவகுத்து விடும். எந்த விஷயத்தையும் ஆராய்ந்து கருத்து தெரிவிப்பதே ஆரோக்கியமானதாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

– கிஷோர்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response