மாவட்டம்
Now Reading
பாஜக ஆட்சியமைப்பதை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு!
0

பாஜக ஆட்சியமைப்பதை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு!

by editor sigappunadaMarch 14, 2017 11:39 am

கோவாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு.

கோவா சட்டமன்ற தேர்தல்கள் முடிந்து முடிவுகள் வெளியாயின. 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஆட்சி அமைக்க 21 தொகுதிகளை பெற்றிருத்தல் வேண்டும். காங்கிரஸ் 17 தொகுதிகளும் பாஜக 13 தொகுதிகளும் மற்றவை 10 தொகுதிகளும் பெற்றிருந்தன. பிறகு சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி உரிமை கோரியது. மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோஜ் பாரிகர் தன் பதவியை இராஜினாம செய்தார். இதனையடுத்து மனோஜ் பாரிகர் கோவா பாஜக சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். பிறகு ஆதரவு எம்.எல்.ஏக்களின் ஆதரவு பட்டியலுடன் ஆளுநரிம் ஆட்சி உரிமை கோரினார்.இதையடுத்து ஆட்சி அமைக்க மனோஜ் பாரிகரை ஆளுநர் அழைத்தார். நாளை மாலை கோவாவின் முதலமைச்சராக மனோஜ் பாரிகர் பதவியேற்கிறார்.

இந்நிலையில் கோவாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதிக இடங்களை பிடித்த கட்சிக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. கோவா காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மேலும் சிறப்பு அமர்வு நாளை இந்த வழக்கை விசாரிக்கும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் கூறியுள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response