மாவட்டம்
Now Reading
பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மோடி பேச்சு
0

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மோடி பேச்சு

by editor sigappunadaJanuary 7, 2017 8:59 pm

பணமதிப்பு நீக்கம் ஒரு புனித நடவடிக்கை என்று பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி செயற்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தார். முதல்நாள் கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பேசினர்.

நிறைவு நாளான சனிக்கிழமை பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதாவது: பாஜகவை பொறுத்தவரை ஏழைகளை வாக்கு வங்கிகளாகக் கருதவில்லை. அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கறுப்புப் பணம், ஊழலை ஒழிப்பதற்காக தற்போது பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் நீண்ட கால பலன்களை அனுபவிக்க முடியும். குறிப்பாக ஏழைகளின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படும்.

பணமதிப்பு நீக்கத்தால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. எனினும் ஏழை மக்கள் அவற்றை சகித்துக் கொண்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response