விளையாட்டு
Now Reading
பாகிஸ்தான் ஒரு நாள் அணியின் கேப்டன் பதவியை இழக்கிறார் அசார் அலி
0

பாகிஸ்தான் ஒரு நாள் அணியின் கேப்டன் பதவியை இழக்கிறார் அசார் அலி

by editor sigappunadaJanuary 24, 2017 3:51 pm

 

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரில் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், தொடரை 3-1 என இழந்து விட்டது. இரு அணிகள் இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே பாகிஸ்தான் ஒரு நாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மூத்த பேட்ஸ்மேன் அசார் அலி நீக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் செய்யும் பாகிஸ்தான் ஒரு நாள் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் அகமதுவை நியமிக்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் உல் ஹக், அந்நாட்டின் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கானுக்கு அறிவுரை கூறியுள்ளார். சர்ப்ராஸ் அகமது தற்போது பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் விரைவில் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது ஓய்வுக்கு பின், டெஸ்ட் அணியின் கேப்டனாக அசார் அலி நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response