மாவட்டம்
Now Reading
பழனி முருகனையே ஏமாற்றும், பஞ்சாமிர்த கொள்ளைக்காரர்கள்!!
0

பழனி முருகனையே ஏமாற்றும், பஞ்சாமிர்த கொள்ளைக்காரர்கள்!!

by Sub EditorJanuary 17, 2017 3:24 pm

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக திகழ்வது பழனி கோவிலாகும். திருப்பதி லட்டுக்கு அடுத்தபடியாக பக்தர்களிடையே புகழ்பெற்றிருப்பது பழனி பஞ்சாமிர்தம்தான். உலகம் முழுவதிலுமிருந்து வரும் பக்தர்கள் வந்து முருகனை வழிபட்டு பழனி பஞ்சாமிர்தத்தை வாங்கிச் செல்கின்றனர். அதனால் இங்கு ஆண்டு முழுவதும் விற்பனை மிக அதிக அளவில் நடக்கும்.

அப்படி புகழ்பெற்ற பஞ்சாமிர்தத்தில்தான் போலி என்று புது பிரச்னை கிளம்பியிருக்கிறது. எப்படி இந்த உண்மை வந்தது தெரியுமா? கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தீடீரென்று நடத்திய சோதனையில், பஞ்சாமிர்தம் டப்பாக்களில் காலாவதி தேதி அச்சிடப்படாமல் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. அறநிலையத்துறை சார்பில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் இப்படியென்றால், தனியார் விற்பனை செய்யும் பஞ்சாமிர்தம் எப்படி இருக்குமோ என்று அங்கும் சோதனை மேற்கொள்ள அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகிவிட்டது.

அவற்றில் சில போலியாக தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் என்றும், சில காலாவதியானது என்றும் தெரிய வந்தது. அவற்றை கைப்பற்றி அழித்தனர் அதிகாரிகள். இலட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து பிரசாதமாக பெற்று செல்லும் பஞ்சாமிர்தம் விற்கும் அறநிலையத்துறை பிரசாத ஸ்டால்களில் விற்க்கப்படும் பஞ்சாமிர்தம் காலாவதியானதா என்பது கூட தெரியாமல் வாங்கி சென்ற பக்தர்களின் நிலைமை கொடுமை என்று அங்கு வந்திருந்த சில பக்தர்கள் கூறினர்.
“இந்தியாவில் திருப்பதிக்கு அடுத்தப்படியாக, வருமானம் கொட்டும் இடமாக பழனி இருக்கிறது. அதில் நல்ல வருமானமும் கிடைத்து வருகிறது. அப்படியிருக்கையில் போலியானதை நுழைத்து அதிலும் திருட்டு வருமானம் பார்ப்பது, முருகனை நம்பி வரும் பக்தர்களை ஏமாற்றுவது அந்த முருகனையே ஏமாற்றுவதுபோல இருக்கிறது. இது பாவம் இல்லையா?” என்று கேள்வி எழுப்புகிறார்கள் உள்ளூர்வாசிகள். “பஞ்சாமிர்தம் தயாரித்து விற்கும் தனியார் கடைகளை விட கோயில் சார்பாக விற்பனை செய்யும் பஞ்சாமிர்தத்திற்கே அதிக வரவேற்பு உள்ளது. இதற்கு காரணம் இங்கு பஞ்சாமிர்தத்தில் மலைவாழை,நெய்,நாட்டுச்சர்க்கரை, கல்கண்டு, பேரிட்சை உள்ளிட்ட பொருட்களை கொண்டு இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது. நீண்ட நாட்கள் கெட்டுப்போகாது என்பது இதன் தனிச்சிறப்பு. அந்த நம்பிக்கையில்தான் பக்தர்கள் இங்கு வாங்கி வருகிறார்கள்.

இப்படியொரு சம்பவம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். “பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரு சிலர் செய்யும் இதுபோன்ற காரியங்களால் எல்லா வியாபாரிகளுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.” என்று தனியார் பஞ்சாமிர்த வியாபாரி ஒருவர் கூறுகிறார்.

பக்தர்களின் உயிரோடு விளையாடும் இந்த செயலுக்கு தமிழ்நாடு அறநிலையத்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

–  பழனி

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response