பேட்டி
Now Reading
பன்னீர்செல்வம் நடத்திய மோசடிகளைக் கண்டுபிடிக்க தனிக்குழு அமைத்த பழனிச்சாமி
0

பன்னீர்செல்வம் நடத்திய மோசடிகளைக் கண்டுபிடிக்க தனிக்குழு அமைத்த பழனிச்சாமி

by editor sigappunadaMay 3, 2017 12:03 pm

பிரிந்த அதிமுக, மீண்டும் ஒன்றாக இணைய வேண்டுமென இரு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு பேசி வருகின்றன. இந்த நிலையில் இரு அணிகளும் ஒன்றாக சேருவது ஒரு சிலருக்குப் பிடிக்கவில்லை. இரு அணிகளும் ஒன்றாக இணைந்தால் எந்தவிதப் பயனுமில்லையென்று நினைக்கும் பலருக்கு உள்ளுக்குள் உள் காய்ச்சல் அடிக்கிறது.

இருவரும் ஒன்றாக இணைவதில் நடைமுறையில் எந்தவிதச் சட்டச்சிக்கலும் இல்லாத நிலையில், மீண்டும் இணைவதில் இரு அணிகளும் இணையாமல் இழுத்துக்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், ‘எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை என்கிற பெயரில் கபட நாடகம் ஆடுகிறார். எடப்பாடி, டி.டி.வி. தினகரனின் கூட்டாளி’ என்று பொது மேடையில் வைத்து பன்னீர்செல்வம் பேசியதால் சமீபத்தில் எடப்பாடியின் தரப்பு பன்னீர்செல்வம் மீது பயங்கர அதிருப்தியில் இருக்கிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தவிர வரும் மே 5 முதல் பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்தப் பயணத்தில் தினகரன் அணியினர் குறித்த பல்வேறு முக்கியமான குற்றச்சாட்டுகளை வெளியிட பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். இதைச் சற்றும் எதிர்பாராத எடப்பாடி பழனிசாமி, பன்னீருக்குப் பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக பன்னீர் முதல்வராக இருந்த காலகட்டத்திலும், அவர் பொதுப்பணித்துறை, நிதித்துறை ஆகிய முக்கியமான பதவிகளில் இருந்து வந்த காலகட்டத்திலும் பன்னீர்செல்வம் நடத்திய மோசடிகளைக் கண்டுபிடிக்க தனிக்குழு அமைத்துள்ளார் எடப்பாடி.பழனிசாமி.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response