அரசியல்
Now Reading
நோபல் பரிசு வென்றால் ரூ.100 கோடி பரிசு: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!
0

நோபல் பரிசு வென்றால் ரூ.100 கோடி பரிசு: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

by Sub EditorJanuary 5, 2017 11:09 am

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் அறிவியல் மாநாடு கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில் நேற்று திருப்பதி பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் குழந்தைகளுக்கான அறிவியல் மாநாடு தொடக்க விழா நடந்தது. இதை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் யாராவது நோபால் பரிசு வென்றால் அரசு ரூ. 100 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கிறேன்.

எதிர்காலத்தில் தொழில்நுட்பம்தான் முன்னணியில் இருக்கும் உலகம் பாராட்டும் விஞ்ஞானிகளாக நீங்கள் உருவாக வேண்டும். புதிய வி‌ஷயங்களை கற்க ஆர்வத்துடன் நீங்கள் (மாணவர்கள்) உள்ளீர்கள். இதை கற்று சாதிக்க வேண்டும்.

மாநிலத்தில் உள்ள 1½ கோடி வீடுகளுக்கு இணையதள வசதியை அளித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்க முடிவு செய்து இருக்கிறேன்.

அனைத்து வீடுகளிலும் இணையதள வசதி ஏற்படுத்த ரூ. 5000 கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது கேபிள் வயர்கள் மூலம் இணையதள வசதியை வழங்கலாம் என்றும் ரூ. 230 கோடியில் செயல்படுத்தலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாதம் ரூ. 149 கட்டணத்தில் அனைத்து வீடுகளிலும் இன்டர்நெட், கேபிள் டி.வி, போன் வசதியுடன் உள்ள திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

பள்ளிகளில் 10-ம் வகுப்புக்கு மேல் இலவச வை-பை வசதி விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் அனைத்து பள்ளிகளும் டிஜிட்டல் பள்ளிகளாக மாறும்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response