விளையாட்டு
Now Reading
நேதன் லயன் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை; இந்திய அணி 189 ரன்களுக்குச் சுருண்டது
0

நேதன் லயன் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை; இந்திய அணி 189 ரன்களுக்குச் சுருண்டது

by editor sigappunadaMarch 5, 2017 1:02 pm

புனே தோல்விக்குப் பிறகான அனைத்து இந்திய பில்ட்-அப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேதன் லயன் 50 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி முதல் நாளிலேயே 189 ரன்களுக்குச் சுருண்டது.

இந்தியாவில் வந்து வீசும் அயல்நாட்டு பவுலர் ஒருவர் எடுக்கும் அதிக விக்கெட்டுகளுக்கான சாதனையை நிகழ்த்தினார் நேதன் லயன். 22.4 ஓவர்கள் வீசிய நேதன் லயன் அதில் 4 மெய்டன்களுடன் 50 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதற்கு முன்னர் லான்ஸ் குளூஸ்னர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஆனால் அவர் 64 ரன்களை விட்டுக் கொடுத்தார், அந்த வகையில் நேதன் லயன் தற்போது குறைந்த ரன்களில் 8 விக்கெட்டுகளை இந்தியாவில் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார். மீதி 2 விக்கெட்டுகளில் கருண் நாயர் விக்கெட்டை ஓகீஃபும், முகுந்த் விக்கெட்டை ஸ்டார்க்கும் வீழ்த்தினர்.

உணவு இடைவேளையின் போது 77/2 என்று இருந்த இந்திய அணி தேநீர் இடைவேளையின் போது 168/5 என்று இருந்தது, தேநீர் இடைவேளைக்குப் பிறகு 189 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணியில் கே.எல்.ராகுல் உண்மையில் சிறப்பாக ஆடி 205 பந்துகள் தாக்குப்பிடித்து 9 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் எடுத்து கடைசியில் 9-வது விக்கெட்டாக லயன் பந்தில் ரென்ஷாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

நேதன் லயன் அருமையாக பிட்சைப் பயன்படுத்திக் கொண்டார். அவரது பந்துகள் அருமையாக இறங்கியதோடு, ஓரளவுக்கு நல்ல பவுன்ஸ், பிட்ச் அளித்த உதவியைப் பயன்படுத்தி கூடுதலாக பந்தை டர்ன் செய்தார், ஆனால் டர்ன் ஆகாத பந்துகளில்தான் கடந்த டெஸ்ட் போல் இந்திய வீரர்கள் காலியாயினர்.

ஜடேஜா தடவியபடிதான் ஆடினார். 16 பந்துகள் தடவி 3 ரன்கள் எடுத்த நிலையில் லயனின் நேரான பந்து ஒன்றில் மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஸ்மித்திடம் கேட்ச் ஆனது, இதே பந்துக்கு எல்.பி.அப்பீலும் இருந்தது, 3-வது நடுவர் தீர்ப்பளித்தார்.

கே.எல்.ராகுல் அருமையாக ஆடி 90 ரன்கள் எடுத்து லயன் பந்தை ஸ்பின்னுக்கு எதிரான திசையில் கவர் டிரைவ் ஆட நினைத்தார், மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்தார். பந்து மட்டையின் மேல் பகுதியில் பட்டு பிறகு பாலோ த்ரூவில் காலில் பட்டு மிட் ஆபில் கேட்ச் ஆனது.

அடுத்த பந்திலேயே இசாந்த் சர்மா பேட்-பேடு கேட்ச் கொடுத்து வெளியேற இந்திய இன்னிங்ஸ் லயனின் அடுத்த இன்னிங்ஸ் ஹேட்ரிக் வாய்ப்புடன் 189 ரன்களுக்கு முடிவுற்றது.

ஆஸ்திரேலியா இன்றைய தினத்தில் இன்னும் 11 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்துள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response