பேட்டி
Now Reading
நெடுவாசல் போராட்டத்துக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு
0

நெடுவாசல் போராட்டத்துக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு

by editor sigappunadaMarch 3, 2017 1:25 pm

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் கிராமத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்துக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவை தெரிவித்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த இரண்டு வாரங்களாக நெடுவாசல் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கங்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தத் திட்டத்தை மாநில அரசு அனுமதிக்காது என்றும் எனவே, நெடுவாசல் மக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் தமிழக முதல்வர் கோரிக்கை வைத்தார். ஆனால் தங்களுக்கு நிரந்தரமான தீர்வு கிடைத்தால் மட்டுமே தங்கள் போராட்டத்தைக் கைவிடுவோம் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்தப் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவிக்கச் சென்ற ஸ்டாலின், “போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன். பொதுமக்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். மக்களின் போராட்டத்துக்கு திமுக என்றுமே ஆதரவாக இருக்கும். தொடர்ந்து 16 நாட்களாக போராட்டம் நடத்த இளைஞர்கள் & தாய்மார்கள் ஆதரவு தருவதைக் கண்டு பெருமைப்படுகிறேன். நெடுவாசல் பிரச்னையை டெல்லி வரை கொண்டு சென்றது திமுக-தான். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். டெல்லிக்குச் சென்றிருந்தபோது மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரை சந்திக்க முடியாமல் போய்விட்டது. போராட்டத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும், மத்திய மாநில அரசுகள் நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response