மாவட்டம்
Now Reading
நெடுவாசல் போராட்டக் குழுவினருடன் மதுரையில் மத்திய அமைச்சர் பேச்சுவார்த்தை
0

நெடுவாசல் போராட்டக் குழுவினருடன் மதுரையில் மத்திய அமைச்சர் பேச்சுவார்த்தை

by editor sigappunadaMarch 5, 2017 11:02 am

மதுரையில் நெடுவாசல் போராட்டக் குழுவினருடன் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எண் ணெய் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி கடந்த 16 நாட்களாக விவசாயிகள், பொதுமக்கள், மாண வர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் போராட்டக்குழு பிரதிநிதிகள் 6 பேர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடை செய்ய வலியுறுத்தினர். அதற்கு தமிழக அரசு அந்த திட்டத் துக்கு அனுமதி அளிக்காது என முதல்வர் உறுதி அளித்தார். ஆனால், முதல்வர் உறுதியளித்தும் நேற்றும் நெடுவாசலில் போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில், நெடுவாசல் சுற்றுவட்டார 50 கிராமங்களைச் சேர்ந்த போராட்டக்குழு பிரதிநிதி கள் செந்தில்தாஸ், ரமேஷ், வினோத், தட்சீணாமூர்த்தி (நெடு வாசல்), அடைக்கலம் (அனவயல்), பழனிவேல் (கருக்காகறிச்சி), காமராஜ் (கரம்பக்காடு) ஆகியோர் தலைமையில் 60 பேர் நேற்று மாலை 5 மணிக்கு மதுரை வந்த னர். இவர்களுடன் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேசன் காவிரி படுகை பொதுமேலாளர் பவன் குமார் உள்ளிட்ட 4 அதிகாரிகள் குழுவினர் நேற்று மாலை பேச்சுவார்த்தையை தொடங்கினர். இதில் பொதுமேலாளர் பவன்குமார், விவசாயிகளுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் முக்கியத்துவம், அதன் நோக்கம், அது எந்த வகையில் கிராமங்களையும், விவ சாயிகளையும் பாதிக்காது என மடிக்கணினியில் எடுத்து வந்த வீடியோ பதிவுகளை காட்டி விளக் கினார்.

ஆனால், விவசாயிகள் அவ ருடைய கருத்துகளை ஏற்க மறுத்து, எக்காரணம் கொண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நெடுவாசலில் தொடங்கவிட மாட் டோம், திட்டத்தை முழுமையாகக் கைவிடும் வரை போராட்டத்தை தொடருவோம் எனக்கூறி வாக்கு வாதம் செய்தனர். மாலை 5.35 மணிக்கு தொடங்கிய பேச்சு வார்த்தை இரவு 9 மணிக்கு மேல் நீடித்தது. இந்த பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல், இரு தரப்பினருக்கும் இடையே காரசார விவாதத்துடன் தொடர்ந்தது. மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் இரு தரப்பினரின் வாதங் களையும் கேட்டு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

முன்னதாக, போராட்டக்குழு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேசன் அதிகாரிகளுடன் தனியாக அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

நெடுநேரம் நீடித்த பேச்சுவார்த் தையால் மதுரையில் பாஜக தலைவர் தமிழசை சவுந்தர் ராஜன் மற்றும் அக்கட்சி தலைவர்கள் பங் கேற்ற கட்சி பொதுக் கூட்டத்துக்கு அமைச்சர் செல்லவில்லை.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response