ஸ்பெஷல்
Now Reading
நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்ற முடிவு
0

நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்ற முடிவு

by editor sigappunadaApril 4, 2017 12:13 pm

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், மாநில அரசுகளுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றுவது குறித்து சட்ட நிபுணர்களுடன் மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

தேசிய, மாநில நெடுஞ் சாலைகளில் செயல்படும் மதுபானக் கடைகளை ஏப்ரல் 1-ம் தேதி முதல் மூட உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இந்த காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 31-ம் தேதி மறுத்துவிட்டது.

இதனால், நாடு முழுவதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ் சாலைகளில் செயல்பட்டு வந்த மதுபான கடைகள், பார்கள், பப்புகள் மற்றும் ஓட்டல் பார்கள் கடந்த 1-ம் தேதி முதல் மூடப் பட்டுள்ளன. இதன் காரணமாக மாநில அரசுகளுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்திக் கொள்வது பற்றியும் அதனால் ஏற்படும் சட்ட சிக்கல்கள் குறித்தும் பல்வேறு மாநில அரசுகள் சட்ட நிபுணர்களுடன் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.

இதன்படி, பல மாநில அரசுகள் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றி உள்ளன. மேலும் சில மாநில அரசுகள் இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றன.

மேற்குவங்க மாநில அரசு மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றி உத்தரவிடுவது குறித்தும் அதனால் ஏற்படும் சட்ட சிக்கல் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள 1,800 கடைகளில் பணியாற்றிய 10 ஆயிரம் பேரின் வேலை பறிபோகும் நிலை உருவாகி உள்ளது.

அவகாசம் கோர முடிவு

நாட்டிலேயே தனிநபர் சராசரி மதுபான நுகர்வில் (ஆண்டுக்கு 10.2 லிட்டர்) கேரளா முதலிடம் வகிக்கிறது. இதன்மூலம் ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் கிடைக் கிறது.

இந்நிலையில் மதுபான கடைகளுக்கான தடையை 3 மாதங்களுக்கு நிறுத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து கேரள அரசு பரிசீலித்து வருகிறது. இதுபோல மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றுவது பற்றியும் ஆலோசித்து வருகிறது.

சண்டிகர் ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்கத்தின் தலைவர் அர்விந்தர் பால் சிங் கூறும்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவால் சுமார் 150 ரெஸ்டாரன்ட்கள், பார்களின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளோம். மேலும் சண்டிகர் நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்து புகார் செய்ய உள்ளோம்” என்றார்.

மும்பையில் 500 பார்கள் மூடல்

மும்பை நெடுஞ்சாலைகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 500 பார்கள் மூடப்பட்டிருந்தன. மேலும் பார் வசதியுடன் கூடிய ஓட்டல்களிலும் உணவு மட்டும் பரிமாறப்பட்டன.

மது வகைகள் வழங்கப்பட வில்லை. இதனால் வாடிக்கை யாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மதுபான தடையால் மகாராஷ்டிர அரசுக்கு ஆண்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்.

ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவால் உத்தரபிரதேசத்தில் சுமார் 8 ஆயிரம் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். எனினும், இதை சமாளிக்க பல நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலையாக மாநில அரசு மாற்றி அமைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநில அரசும் 16 மாவட்டங்கள் வழியாக செல்லும் 3,029 மாநில நெடுஞ்சாலைகளில் 190 கி.மீ. சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றி உத்தரவிட்டுள்ளது.

கடைகளை மாற்ற ஆலோசனை

இதுபோல சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற கோவா மாநிலமும் உச்ச நீதிமன்ற உத்தரவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டு வேறு இடங்களில் மாற்றி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response