மாவட்டம்
Now Reading
நீலாங்கரையில் பரபரப்பு – ஷோரூம் மேலாளர் காரில் கடத்தல்; மர்ம கும்பலுக்கு வலை
0

நீலாங்கரையில் பரபரப்பு – ஷோரூம் மேலாளர் காரில் கடத்தல்; மர்ம கும்பலுக்கு வலை

by editor sigappunadaJanuary 24, 2017 3:47 pm

துரைப்பாக்கம் – தனியார் ஷூ ஷோரூம் மேலாளர் காரில் கடத்தப்பட்டது நீலாங்கரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் சென்னை குரோம்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். நீலாங்கரை அடுத்த அக்கரை பகுதியில் உள்ள தனியார் ஷூ ஷோரூமில் மேலாளராக பணியாற்றுகிறார். நேற்று இரவு மணிகண்டன் பணியில் இருந்தபோது காரில் ஒரு கும்பல் கடைக்கு வந்தது.  காரில் இருந்து இறங்கிய ஒருவர் கடைக்குள் சென்றார். அவர், மணிகண்டனிடம் “உங்களிடம் பேசவேண்டும். வெளியில் வாங்க “ என்று அழைத்துள்ளார். இதையடுத்து அவருடன் வந்த மணிகண்டனை திடீரென அனைவரும் சேர்ந்து மணிகண்டனை தூக்கி காரில் வைத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர்.

இதை பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து கடைக்காரர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின்படி, கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுபற்றி சென்னையில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கடத்தப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response