சினிமா
Now Reading
நீதியின் காவலருக்கு புத்தியோ நீதியோ சொல்லப்போவது யார்? -நடிகர் கமல்
0

நீதியின் காவலருக்கு புத்தியோ நீதியோ சொல்லப்போவது யார்? -நடிகர் கமல்

by editor sigappunadaJanuary 24, 2017 9:55 am

நீதியின் காவலருக்கு புத்தியோ நீதியோ சொல்லப்போவது யார்? என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் கமல்.

ஜல்லிக்கட்டு ஆதரவாக மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் தமிழகமெங்கும் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வந்தார்கள்.

மேலும், சென்னையில் ஒரு சில இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் கலவரக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினார்கள். இது குறித்த வீடியோ பதிவுகள் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டன.

இதில் காவல்துறை அதிகாரிகள் ஆட்டோவுக்கு தீ வைக்கும் வீடியோ ஒன்று வைரலாகா பரவி வருகிறது. இந்த வீடியோ பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிரிந்து “இது என்ன என்று யாராவது விளக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து கமல், “ராணுவத்தில் கட்டாயமாக சேவை செய்ய வேண்டும் என்று சொன்னால் நாம் ஏற்றுக்கொள்வோமா? அப்படியென்றால் ஓட்டு போட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாலும் அது தவறுதான்.

ஓட்டு போட மானியம் தருவது பலனைத் தரலாம் ஆனால் ஓட்டுக்காக பணம் தரும் அரசியல்வாதிகளின் செயலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

நன்றி கனம். நீதிபதிகளே. நீதியும்! சட்டமும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டன. நீதியின் காவலர்க்கு புத்தியோ நீதியோ சொல்லப்போவது யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் கமல்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response