பேட்டி
Now Reading
நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்
0

நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்

by editor sigappunadaJanuary 31, 2017 2:02 pm

எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வுக்கு பதிலாக, ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கைக்கு வகை செய்யும் சட்ட முன்வடிவு செவ்வாய்க்கிழமை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த இந்த சட்டமுன்வடிவின் முக்கிய அம்சங்கள்:

‘மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் எனப்படும் ஒரே சீரான நுழைவுத் தேர்வு காரணமாக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இந்தத் தேர்வு தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி வாரியத்தால் வகுக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து வேறுபட்டிருக்கிறது. எனவே, தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை தீர்க்கும் வகையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில், மாணவர்களை சேர்ப்பதற்கு ப்ளஸ் டூ தேர்வில் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தொடர்ந்து சேர்த்துக்கொள்வது என்று அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.

இதேபோன்று, மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் முதுநிலைப் படிப்புகளுக்குரிய சேர்க்கை தொடர்பானவற்றில் தற்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும் என மாநில அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.’

இவ்வாறு, 2017-ம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டமுன்வடிவை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்களும் வரவேற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

மேலும் 2 சட்ட முன்முடிவுகள்:

2017-ம் ஆண்டின் தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை ஒழுங்குமுறைப்படுத்தும் திருத்தச் சட்டம் என்ற சட்ட முன்வடிவை வேளாண்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் உள்ள 277 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மனித ஆற்றல் மூலம் ஏலம் நடத்தப்படுவதை தவிர்த்து, மின்னணு வர்த்தகம், சீரான ஒருமுனை உரிமம், ஒருமுனை விற்பனைக் கட்டணத் தீர்வை ஆகியவை தொடர்பான வரைமுறைகளை கொண்டு இச்சட்ட முன்வடிவு வகை செய்கிறது.

மேலும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தாக்கல் செய்த சட்ட முன்வடிவில், நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ட ஒருவர் தகுந்த காரணமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டால், அவர் செய்யும் மேல்முறையீட்டுக்கு சிறந்த முறையில் தீர்வு காண 1908-ம் ஆண்டு உரிமையியல் நடைமுறை தொகுப்பு சட்டத்தின்படி மேல்முறையீடு விசாரணை அலுவலருக்கு அதிகாரங்களை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response