உலகம்
Now Reading
நிலவில் கடைசியாக நடந்த மனிதன் காலமானார்!!
0

நிலவில் கடைசியாக நடந்த மனிதன் காலமானார்!!

by Sub EditorJanuary 17, 2017 12:37 pm

அமெரிக்க விண்வெளி வீரரான எயூஜின் கெர்னான் கடந்த 1972-ம் ஆண்டு அப்பல்லோ 17 விண்கலத்தில் சந்திரனுக்கு சென்று, அங்கு தங்கி சில ஆய்வுகளை மேற்கொண்டார்.

இதுவரை சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்களில் கடைசியாக அங்கு ஆய்வுகளை செய்தவர் என்னும் பெருமைக்குரியவரான எயூஜின் கெர்னான், உடல் நலக்குறைவால் தனது 82-வது வயதில் டெக்சாஸ் மாநிலத்தின் ஹுஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார்.

யூஜினின் மரணத்திற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ’நாசா’ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

நிலவில் கடைசியாக நடந்த மனிதன் என்ற பெருமை என்னோடு முடிந்துவிட கூடாது, வருங்கால தலைமுறையினரும் சந்திர மண்டலத்துக்கான பயணங்களை தொடர வேண்டும் என விரும்பினார் எயூஜின்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response