விளையாட்டு
Now Reading
நியூசிலாந்திடம் தொடரை இழந்தது வங்காள தேசம்!
0

நியூசிலாந்திடம் தொடரை இழந்தது வங்காள தேசம்!

by Sub EditorDecember 29, 2016 6:51 pm

நியூசிலாந்து – வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நெல்சனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காள தேசம் பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி நியூசிலாந்து அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் கப்தில் 0 ரன்னிலும், லாதம் 22 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் 14 ரன்னில் வெளியேறினார்.

ஆனால் 4-வது வீரராக களம் இறங்கிய நெய்ல் ப்ரூம் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அத்துடன் 109 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இவரது சதத்தால் நியூசிலாந்து அணி சரியாக 50 ஓவரில் 251 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வங்காள தேசம் அணி சார்பில் அதிகபட்சமாக மோர்தசா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் இம்ருல் கெய்ஸ் 59, அடுத்து வந்த சபீர் ரஹ்மான் 38 ரன்கள் அடித்தாலும், அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற வங்காள தேசம் 42.4 ஓவரில் 184 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 26-ந்தேதி நடைபெற்ற முதல் போட்டியில் ஏற்கனவே 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்ததால் நியூசிலாந்து அணி தொடரை 2-0 எனக்கைப்பற்றியது.

இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி 31-ந்தேதி நடக்கிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response