அரசியல்
Now Reading
நாளை கூடும் தி.மு.க. பொதுக்குழு!
0

நாளை கூடும் தி.மு.க. பொதுக்குழு!

by Sub EditorJanuary 3, 2017 11:36 am

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக் குழுவை கூட்ட வேண்டும். செயற்குழுவை 2 முறை கூட்ட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறையாகும்.

இதன்படி தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தை கடந்த மாதம் 20-ந்தேதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் அப்போது பொதுக்குழு கூட்டம் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது கருணாநிதி குணம் அடைந்து கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதனால் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தலைவர் கருணாநிதி தலைமையில் 20.12.16 அன்று சென்னையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் நாளை (4-ந்தேதி) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட பொதுக்குழு கூட்ட அழைப்பிதழை இந்த கூட்டத்திற்கு வரும்போது தவறாமல் கொண்டு வர வேண்டும். கட்சியின் ஆக்க பணிகள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

 

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response