சினிமா
Now Reading
நாய்கடி வாங்கிய நடிகை இப்போது எப்படி இருக்கிறார்?
0

நாய்கடி வாங்கிய நடிகை இப்போது எப்படி இருக்கிறார்?

by Sub EditorFebruary 4, 2017 3:32 pm

தனுஷ் படமான ட்ரீம்ஸ் மூலம் ஹீரோயின் ஆனவர் பருல் யாதவ். இவர் ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாயுடன் நேரம் கிடைக்கும்போது, வாக்கிங் செல்வது இவர் வழக்கம். எப்போதும் போல் சமீபத்தில் நாயுடன் வாக்கிங் போனபோது, தெரு நாய்கள் ஒன்று கூடி இவர் மேல் பாய்ந்தன.
இவரின் கன்னம், முகம், கழுத்து, தோள்பட்டை என்று எங்கேயும் நாய் கடிகள். உடலெங்கும் காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இவர் தற்போது தன் ரசிகர்கள், தன் நல விரும்பிகளுக்கு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். ‘நான் நலமோடு வீட்டுக்கு வந்து விட்டேன். விரைவில் பழைய நிலைக்கு திரும்புவேன். என் மீது அக்கறை கொண்டு என்னைப் பார்க்க வந்தவர்களுக்கு, நான் நலம்பெற வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றி.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த நாய் எப்படி இருக்கிறதென்று சொல்லவில்லையே!

– நல்லதம்பி

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response