Now Reading
நான்குபேர் பலியானால்தான் நடவடிக்கை எடுக்குமா அரசு -கொதிக்கும் பொதுஜனம்!
0

நான்குபேர் பலியானால்தான் நடவடிக்கை எடுக்குமா அரசு -கொதிக்கும் பொதுஜனம்!

by Sub EditorJanuary 17, 2017 5:47 pm

“விக்ஸ் மாத்திரை சாப்பிடுங்க, தலைவலி போக்கிடுங்க” என்ற விக்ஸ் விளம்பர வரிகள் மிகப் பிரபலம்.
தலைவலியா? ஜலதோஷமா? விக்ஸ் ஆக்‌ஷன் 500 மாத்திரை போடுங்க என்று டி.வி.யில் அடிக்கடி கூறுவது நம் காதில் விழுந்த காலம் ஒன்று.
ஏன்?

கடந்த ஆண்டு மார்ச் மாதம் விக்ஸ் ஆக்‌ஷன் 500 மாத்திரை, கோரக்ஸ் உள்பட 344 வகை மருந்துகளுக்கு மத்திய அரசு திடீர் தடை விதித்தது. இந்தவகை மருந்துகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் மத்திய அரசின் சுகாதாரத்துறை தடை உத்தரவு பிறப்பித்தது.

ஏன் தடைவிதித்தது?

அரசின் அனுமதி இல்லாமல் விற்பனை செய்யப்பட்டதாலும் சிலவற்றில், பல பிரச்சினைகளுக்கு ஒரே மருந்து என்ற மருந்துச் சேர்க்கை கலவையும் இருந்ததால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அப்போது அறிவிக்கப்பட்டது. பிரச்சினைகளுக்கான சர்வரோக நிவாரண மருந்துக் கலவையை ஒற்றை மாத்திரையிலோ அல்லது மருந்திலோ கலந்து வைத்திருப்பதுதான் இம்மருந்துகளின் சிறப்பு. அந்த சிறப்புதான் அதற்கு ஆபத்தாக அமைந்து விட்டது. ஒரே மருந்தில் பல நோய்களுக்கான நிவாரணம் இருப்பது உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் என்று காரணம் காட்டித்தான் தடை செய்தது.
அதுமட்டுமல்ல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இதற்கான அங்கீகாரத்தை மத்திய அரசிடம் பெறாமல் மாநில அரசின் சுகாதாரத்துறையிடம் பெற்று சந்தை
களில் விற்பனை செய்து வந்துள்ளதும் தடை செய்யப்பட்டதற்கு மிக முக்கிய காரணம்.
சுமார் 6ஆயிரம் வகை சேர்க்கை மருந்துகள் மத்திய அரசிடம் அனுமதி பெறாமல் வெறும் மாநில அரசுகளின் ஒப்புதலோடு மட்டும் சந்தையில் உலா வருவதை மத்திய அரசு ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து கண்டறிந்தது.

சரி. இப்போது அதற்கு என்ன என்று கேட்கிறீர்களா?

தடை செய்யப்பட்ட மருந்துகள் மருந்து கடைகளில் இன்னும் விற்பனை செய்யபடுகிறது என்ற அதிர்ச்சி தான் நம்மை அதிர வைக்கிறது. குறிப்பாக விக்ஸ் ஆக்‌ஷன் 500 மாத்திரைகள் இன்னும் பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்படுவது தற்போது தெரியவந்துள்ளது. பெட்டிக்கடை, மளிகைக் கடை என்று எல்லா இடங்களிலும் விக்ஸ் ஆக்‌ஷன் 500 மாத்திரைகள் இருப்பு வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஆபத்தை உணராமல் மக்களும் அதை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து புகழ்பெற்ற மருத்துவர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, “அரசு ஒரு மருந்தை தடைசெய்கிறது என்றால், பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்த பிறகே தடை ஆணை பிறப்பிக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த மருந்துகளை உட்கொள்வதால் உயிருக்கு உடனடி ஆபத்தில்லை என்றபோதிலும் நாளடைவில் பெரும் பாதிப்பை உண்டு பண்ணும். எனவே தடைசெய்யப்பட்ட மருந்துகளை உட்கொள்ள கூடாது” என்று கூறினார்.

தடைசெய்யப்பட்ட மருந்துகள் விற்பனை குறித்து மாநில சுகாதாரப் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, “இது குறித்து அரசுக்கு புகார்கள் வரவில்லை. நீங்கள் கூறிய பிறகுதான் தெரியவருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அரசு தடை செய்திருக்கும் மருந்துகளை கடைகளில் விற்பனை செய்வது தண்டைக்குறிய குற்றம். விற்பனை செய்யும் மருந்தகங்களின் லைசென்ஸை ரத்து செய்ய முடியும். எனவே பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகளை விற்பனை செய்யவேண்டாம்” என்று கூறினர்.

இதையெல்லாம் நீங்களா போய் பார்க்க மாட்டீங்களா? நாங்கள் நான்கு பேர் பலியான பிறகுதான் நடவடிக்கை எடுப்பீர்களா? என்று கேட்கிறது பொது ஜனம்.

– எஸ்.சுபத்ரா

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response