பேட்டி
Now Reading
நாஞ்சில் சம்பத் சாப்பாட்டு தட்டில் இருப்பது சோறா அல்லது வேறா: பாத்திமா பாபு
0

நாஞ்சில் சம்பத் சாப்பாட்டு தட்டில் இருப்பது சோறா அல்லது வேறா: பாத்திமா பாபு

by editor sigappunadaMarch 8, 2017 1:06 pm

தம்மை இழிவாக விமர்சித்த சசிகலா அணியின் நாஞ்சில் சம்பத்துக்கு பதிலடி கொடுத்துள்ள ஓபிஎஸ் அணியின் பாத்திமா பாபு, உங்கள் தட்டில் இருப்பது சோறா? அல்லது வேறா என சாடியுள்ளார்.

நாஞ்சில் சம்பத் நேற்று வெளியிட்டுள்ள முகநூல் பக்க பதிவில், பாத்திமா பாபு, நடிகை லதா ஆகியோரை ‘பத்தினி தெய்வங்கள்’ என வசைபாடியிருந்தார்.

இதற்து நெட்டிசன்களிடம் சம்பத் கடுமையாக வாங்கிக் கட்டிக் கொண்டார். இது தொடர்பாக பாத்திமா பாபு, நடிகை லதாவும் ஆகியோர் நேரடியாகவோ, ஊடகங்களிலோ எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் நாஞ்சில் சம்பத்தின் முகநூல் பக்கத்தில் பாத்திமா பாபு ஒரு நெத்தியடியான கமெண்ட் போட்டிருக்கிறார்.

அதில், சம்பத் அவர்களே! உங்கள் வாந்தியை பொதுவெளியில் எடுத்துள்ளீர்கள்…. நேரமிருந்தால் பின்னூட்டங்களைப் படித்து பாருங்கள். உங்கள் தட்டில் இருப்பது சோறா அல்லது வேறா என்ற கேள்வி உங்களுக்கு மிகப் பொருத்தம் என ஐயம் திரிபற நிரூபித்துவிட்டீர்கள் என பாத்திமா பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response