மாவட்டம்
Now Reading
நர்சிங் மாணவி பலாத்காரம் – 3 பேர் கைது
0

நர்சிங் மாணவி பலாத்காரம் – 3 பேர் கைது

by editor sigappunadaJanuary 24, 2017 3:40 pm

பொள்ளாச்சி அருகே ஏ.நாகூரை சேர்ந்த 19வயது பெண், கோவையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த கார்த்தி(18) என்பவரும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அந்த மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரை கார்த்தி பலாத்காரம் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை, கார்த்தி தனது நண்பரான நெகமத்தை சேர்ந்த கார்த்திக்(23) என்பவரின் வாட்ஸ்-அப்புக்கு அனுப்பியுள்ளார். இதை வைத்து, மிரட்டி கார்த்திக், அவரது நண்பரான மாக்கினாம்பட்டியை சேர்ந்த சபரீஸ்வரன்(19) ஆகியோர் அந்த மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மூன்றுபேரும், அந்த மாணவியை மிரட்டி பாலியல் சம்பவத்திற்கு உட்படுத்த முயன்றுள்ளனர். இது தொடர்பாக மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்கள் 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response