அரசியல்
Now Reading
நரேந்திர மோடி ஆணவம் பிடித்தவர் – மம்தா பானர்ஜி…
0

நரேந்திர மோடி ஆணவம் பிடித்தவர் – மம்தா பானர்ஜி…

by Sub EditorJanuary 18, 2017 12:44 pm

கருப்புப் பணத்துக்கு எதிராக அதிக மதிப்புடைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என்ற தடை அறிவிக்கப்பட்ட நாள் முதல், மம்தா எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறார். மேலும் இந்த நடவடிக்கையால் சாமானிய மக்களும், ஏழைகளும்  பாதிக்கப்படுவதால் மத்திய அரசு அந்த தடையை அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எனினும் அந்த நடவடிக்கை இதுநாள்வரை திரும்பப் பெறப்படாததால் மத்திய அரசின் மீது மம்தா அவ்வப்போது குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்.

இந்நிலையில், சுட்டுரைப் பக்கத்தில் மம்தா, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தால் சாமானிய மக்களும், ஏழைகளும் கடுமையாக பாதிக்கப்படுவது தெரிந்தும், அந்த நடவடிக்கையைத் திரும்பப் பெறாத பிரதமர் மோடி ஆணவம் பிடித்தவர் என்றே கருதுகிறேன்.

வங்கி வாயில்களிலும், ஏடிஎம் மையங்களிலும் பணம் எடுக்க காத்திருந்தோரில் பல்வேறு காரணங்களால் இதுவைர 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.
இந்த இறப்பு தொடர்பான பட்டியலில் 32 உயிரிழப்புகளுடன் உத்தரப் பிரதேசம் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடதக்கது. 13 உயிரிழப்புகளுடன் மேற்கு வங்கமும், 11 உயிரிழப்புகளுடன் மகாராஷ்டிரமும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response