பேட்டி
Now Reading
நம் போராட்டத்துக்குக் கிடைத்த பெரிய வெற்றி -ஆர்ஜே பாலாஜி
0

நம் போராட்டத்துக்குக் கிடைத்த பெரிய வெற்றி -ஆர்ஜே பாலாஜி

by editor sigappunadaJanuary 23, 2017 12:01 pm

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் இன்று காலை வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இதனால் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மெரினாவிலிருந்து வெளியேற மாணவர்களும் பொதுமக்களும் மறுத்தார்கள். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது.

இந்த விவகாரம் குறித்து நடிகர் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது:

ஜல்லிக்கட்டு நடக்கவேண்டும் என்கிற நமது கோரிக்கையை அரசு நிறைவேற்றிவிட்டது. இனி அது தொடர்ந்து நடப்பதற்கான நிரந்தர வழியை உருவாக்குவோம் என்று அரசு கூறியுள்ளது. இதுவே நம்
போராட்டத்துக்குக் கிடைத்த பெரிய வெற்றி.

ஆனால் இதுபோன்று வன்முறையில் ஏன் போராடவேண்டும். ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? காவல்துறை ஒருவாரமாக நம்முடன் இருந்தார்கள். அரசாங்கம் நாம் கேட்டத்தை டெல்லிவரை சென்று சட்டமாகக் கொண்டுவந்தார்கள்.

இதை முதல் வெற்றியாக எடுத்துக்கொண்டு நாம் கொண்டாடியிருக்கவேண்டும். ஆனால் வன்முறையில் ஈடுபட்டது கேவலமான செயல். யாரோ ஒருவர் பொறுக்கி என்று சொன்னதற்காகக் கோபப்பட்டோம். ஆனால் இந்தச் சம்பவத்தால் நிஜமாகவே பொறுக்கி என்று பெயர் வாங்கிவிடுவோமே என பயமாக உள்ளது. யார் அங்கு இருந்தாலும் வீட்டுக்குச் சென்றுவிடுங்கள். போராட்டம் முடிந்துவிட்டது.

மாணவர்கள் போராடியபோது அறப்போராக இருந்தது. யார் உள்ளே நுழைந்தார்கள் எனத் தெரியவில்லை. தற்போது நடந்தது அனைத்துமே தவறு. போராட்டம் முடிந்துவிட்டது. வீட்டுக்குத் திரும்புங்கள் என்றார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response