அரசியல்
Now Reading
நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து ஸ்டாலின் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை
0

நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து ஸ்டாலின் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை

by editor sigappunadaFebruary 21, 2017 12:28 pm

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சனிக்கிழமை தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் அவைக் காவலர்கள் மூலம் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்தாததைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளியேறினர்.

பின்னர் டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்தும், வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்க கோரியும் உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் நேற்று முறையிடப்பட்டது. சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க.வினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவாக தாக்கல்செய்தால் அவசர வழக்காக நாளை (செவ்வாய்) விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் நேற்று உடனடியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக, தன்னிச்சையாக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யவில்லை என்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி சட்டப் பேரவைத் தலைவர் அறிவித்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், ‘பிப்ரவரி 18 அன்று சட்டப் பேரவையில் நடந்த நிகழ்வுகளின் வீடியோ பதிவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், அந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது எனவும் அறிவிக்க வேண்டும். மேலும், எந்தவொரு எம்.எல்.ஏ.வையும் வெளியேற்றாமல் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை தமிழக ஆளுநரின் செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் கண்காணிப்புக் குழு அமைத்து அவர்களது மேற்பார்வையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும். அதை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், அதுவரை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எந்தவொரு கொள்கை முடிவையும் எடுக்கக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்’ என்றும் ஸ்டாலின் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு ஏற்கப்பட்டது. அப்போது, ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டமன்றத்தில் 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோவில் சபாநாயகரும் பேரவைச் செயலரும் திருத்தம் செய்திருப்பதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து, இந்த மனு நாளை காலையில் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response