அரசியல்
Now Reading
நடிகர் சத்யராஜின் மகள் நடிக்க வருகிறார்
0

நடிகர் சத்யராஜின் மகள் நடிக்க வருகிறார்

by editor sigappunadaJanuary 11, 2017 6:51 pm
divya sathyaraj

divya sathyaraj

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர், சத்யராஜ். இவரது மகன் சிபிராஜும் திரையுலகில் நீண்ட நாட்களாக இயங்கி வருகிறார். சிபிராஜும் நடிப்பில் தன்னை நிரூபித்திவிட்டார். நாணயம், லீ மற்றும் நாய்கள் ஜாக்கிரதை போன்ற படங்கள் அவரது நல்ல நடிப்புக்கு எடுத்துக்காட்டாகும். தற்போது சத்யராஜின் மகள் திவ்யாவும் ஒரு குறும்படத்தின் மூலமாக திரைத்துறையில் பங்குபெறவுள்ளார். இவர் MPhil Nutrition and Counselling படித்தவர், பிரபலமான ஊட்டச்சத்து ஆலோசகர்.

பெங்களூரை சேர்ந்த இயக்குநர் வினித் ராஜன் இயக்கும் குறும்படத்தில் திவ்யா பங்களிக்க உள்ளார். இது விளையாட்டு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வை மையப்படுத்திய குறும்படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தில் பிரபலமான டென்னிஸ் வீரர்கள் சிலர் இணைவதாக சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். இந்த குறும்படத்தை, மும்பையையில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனம் தயாரிக்கிறார்கள்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response