சினிமா
Now Reading
நடிகர் சங்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது; செப்.2018-ல் திறப்பு விழா: விஷால் தகவல்
0

நடிகர் சங்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது; செப்.2018-ல் திறப்பு விழா: விஷால் தகவல்

by editor sigappunadaMarch 31, 2017 10:07 am

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. செப்டம்பர் 2018-ல் திறப்பு விழா என விஷால் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக தியாகராயநகரில் 19 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் புதிதாக நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்படும் என்று புதிய நிர்வாகிகள் பதிவியேற்றவுடன் அறிவித்தார்கள். இக்கட்டிட நிதிக்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

இக்கட்டிடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. முதலில் பூமி பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால் மற்றும் துணைத் தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் இணைந்து முதல் செங்கலை வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து இவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருமே ஒரு செங்கல் எடுத்து வைத்து வருகிறார்கள்.

அடிக்கல் நாட்டுவிழா முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் விஷால் பேசும் போது, “அனைவருமே வந்து ஒரு செங்கல் வைத்து பூஜை செய்து வாழ்த்துகிறார்கள். இக்கட்டிடம் மிகவும் சிறப்பாக வரும். 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்து பணிகளும் முடிந்து இக்கட்டிடம் திறக்கப்படும். இக்கட்டிடம் மூலமாக மாதம் தோறும் 50 லட்சம் ரூபாய் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அப்பணம் மூலமாக உறுப்பினர்கள், நாடக நடிகர்கள், மூத்த நடிகர்கள் என அனைவரும் வழிக்காட்டியாக இருக்கும். அதற்குத் தான் முயற்சி செய்து வருகிறோம்.

இந்தக் கட்டிடம் வந்தால் நல்லது நடக்கும் என்பதால் தான் அனைத்து தடைகளைத் தாண்டி வந்துள்ளோம். யாராலும் எங்களை தடுக்க முடியாது. நாங்கள் கஷ்டப்படுவது, எங்களது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. உறுப்பினர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் தான்.

நானும், கார்த்தியும் 10 கோடி ரூபாய் இக்கட்டிடத்துக்கு நிதியாக கொடுக்கப் போகிறோம். இந்த நடிகர் சங்கம் என்றைக்குமே சிறப்பாக செயல்படும் என்பது எங்கள் நோக்கம்” என்று தெரிவித்தார்.

சுமார் ரூ.26 கோடி செலவில் 4 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடமாக அமையவுள்ளது. 1000 பேர் அமரும் அரங்கம், திருமண மண்டபம், ப்ரிவியூ திரையரங்கம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட பல அம்சங்கள் இக்கட்டிடத்தில் இடம்பெறவுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response