அரசியல்
Now Reading
நடிகர் அஜித்தின் பாடல் செய்த சாதனை
0

நடிகர் அஜித்தின் பாடல் செய்த சாதனை

by editor sigappunadaJanuary 31, 2017 11:43 am

எந்த மாதிரியான பாடல் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என்பதை மிகப் பெரிய இசை ஜாம்பவான்களாலும் கணிக்க முடிவதில்லை. சில பாடல்கள் படம் வெளிவரும் சமயத்தில் பரவலாக மக்களால் விரும்பப்பட்டு படம் திரையரங்கை விட்டுப் போனதும் காணாமல் போய்விடுகின்றன. சில பாடல்கள் மட்டுமே வருடங்கள் ஆனாலும் மக்களால் விரும்பி கேட்கப்படும்.

அஜித் நடிப்பில் சிவா இயக்கி 2015 ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் வேதாளம். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் ஆலுமா டோலுமா பாடல் தமிழகம் எங்கும் ஒலித்தது. சென்னைத் தமிழில் பாடலுக்கு வரிகள் எழுதியவர் G.ரோகேஷ் . படம் வெளியாகி 2 வருடங்கள் ஆகியும் இந்த பாடல் யு டியூப்பில் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது. அதிலே ஒரு சாதனையும் படைத்துள்ளது. தற்போது வரை இந்த பாடல் யு டியூப்பில் ஒன்றரை கோடிக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. அஜித்தின் வேறெந்த பாடலுக்கும் கிடைக்காத இந்த பெருமையை ‘ஆலுமா டோலுமா’ பெற்றுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response