பேட்டி
Now Reading
தேர்தலி நிச்சயம் போட்டியிடுவேன் – ஜெய. தீபா
0

தேர்தலி நிச்சயம் போட்டியிடுவேன் – ஜெய. தீபா

by editor sigappunadaJanuary 18, 2017 11:30 am

நேற்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டு அவரது சமாதியில் அஞ்சலி செலுத்திய தீபா ஜெயலலிதா போலவே தன் தோற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறார். ஜெயலலிதா அணியும் சேலை மட்டும் தான் இல்லை. மற்றபடி தலைமுடி உட்பட அவரது பாவனைகளை பின்பற்றும் தீபா. நேற்று தன் வீட்டின் முன்னால் திரண்ட தொண்டர்களிடம் பேசிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், பதில்களும்.

கேள்வி:- ஜெயலலிதா மரணம் பற்றி அவர் குடும்பத் தினர் யாரும் ஆட்சேபம் சொல்லவில்லை என்று ஐகோர்ட்டுகூறியுள்ளதே?

பதில்:- எனது சகோதரர் தீபக் 70 நாட்கள் உடன் இருந்ததாக தெரிவித்துள்ளார். எனவே அம்மா மரணம் தொடர்பாக வேறுஎதுவும் எனக்குத் தெரியவில்லை.

கே:- ஜெயலலிதா சொத்துக்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று பரவலாக பேசப்படுகிறதே?

ப:- இது மக்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி. எனது சுற்றுப் பயணத்தின் போது மக்களிடம் பல்வேறு கருத்துக்களைகேட்க உள்ளேன். அதன் பின்னரே இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும்.

கே:- உங்களின் சொந்த அத்தை என்ற முறையில் அவரது சொத்துக்களை நீங்கள் எதிர் பார்க்கவில்லையா?

ப:- அது போன்ற எதிர்பார்ப்புகள் எதுவும் என்னிடம் இல்லை. அவர் வாங்கிய பெயரை வாங்க வேண்டும்.

அவர் பயன்படுத்திய ஒரே ஒரு பேனா மட்டும் கொடுங்கள் எனக்கு அது போதும்.

கே:- எந்தவித அனுபவமும் இல்லாமல் அரசியலுக்கு வருகிறீர்களே? உங்களால் வெற்றி பெற முடியுமா?

ப:- அரசியலுக்கு வருவதற்கு அனுபவம் வேண்டும் என்ற அவசியம் இல்லை. படித்தவர்கள், புதியவர்கள் அரசியலுக்குவரவேண்டும் என்று எல்லாரும் சொல்கிறார்கள். எனவே எந்த அடிப்படையில் இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள்என்று புரியவில்லை.

கே:- பா.ஜ.க. சார்பில் உங்களிடம் யாராவது தொடர்பில் இருக்கிறார் களா? பேசினார்களா?

ப:- என்னிடம் யாரும் அது போன்று எந்த தொடர்பிலும் இல்லை.

கே:- அ.தி.மு.க.வில் உள்ள சிலர் உங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறதே?

ப:- அதுபோன்று யாரும் என்னிடம் பேசவில்லை. அ.தி.மு.க. தொண்டர்கள் தான் என் வீட்டு முன்பு தினமும்கூடுகிறார்கள்.

கே:- எங்கள் குடும்பம்தான் ஜெயலலிதாவை காத்து வந்ததாக திவாகரன் கூறியுள்ளாரே?

ப:- எந்த அடிப்படையில் இது போன்று கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதை என்னால் ஏற்கஇயலாது.

கே:- அ.தி.மு.க. தலைமையை விரும்பாத தொண்டர்களே உங்களைத் தேடி வருகிறார்கள். ஆனால் அது பற்றி நீங்கள்வெளிப்படையாக பேசாதது ஏன்?

ப:- என்னைத் தேடி வந்துள்ள மக்களிடம் இன்னும் நிறைய கருத்துக்களை கேட்க வேண்டியதுள்ளது. இப்போதுதானே நாம்பயணத்தைத் தொடங்கியுள்ளோம்.

கே:- அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானதை ஏற்கிறீர்களா?

ப:- நான் எனது வழியில் பயணிக்க விரும்புகிறேன். மக்கள் ஆதரவுடன் அந்த பயணம் இருக்கும்.

கே:- உங்களது பதில்களில் தெளிவான, உறுதியான கருத்துக்கள் இல்லையே? உங்கள் அத்தையை போன்று சொல்லவந்ததை தெளிவாக உறுதியாக சொல்ல வேண்டியதுதானே?

ப:- அவரைப் போலவே இருக்கிறேன் என்பதற்காக அவரது செயல்பாடுகள் போல என்னிடமும் எதிர்பார்க்க முடியாது.இப்போதுதானே வந்துள்ளேன்.

கே:- தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாக நடிகர் ரஜினி கூறி உள்ளாரே?

ப:- நான் ஏற்கனவே கூறியது போல அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது அவரவர் விருப்பம்.

கே:- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா?

ப:-தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன். அது ஆர்.கே.நகர் தொகுதி தானா என்பதை இப்போது சொல்ல முடியாது.

இவ்வாறு தீபா கூறினார்.

 

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response