உலகம்
Now Reading
துப்பாக்கியை காட்டி மிரட்டி மனைவிக்கு அடி – உதை; எம்.பி. கைது!
0

துப்பாக்கியை காட்டி மிரட்டி மனைவிக்கு அடி – உதை; எம்.பி. கைது!

by Sub EditorJanuary 2, 2017 10:58 am

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் ஐகன் நகரை சேர்ந்தவர் கிறிஸ் கார்லே (36). இவர் குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பி ஆக இருக்கிறார்.

இவருக்கும், மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கிறிஸ் தனது மனைவியை அடித்து உதைத்தார். முகத்தில் குத்தி காயம் ஏற்படுத்தினார்.

மேலும் துப்பாக்கியை காட்டி உன்னை சுட்டுக் கொன்று விடுவேன் என மிரட்டினார். உடனே அவரது மனைவி ஐகன் நகர் அவசர போலீஸ் எண் 911-க்கு டெலிபோன் செய்தார்.

இதற்கிடையே, துப்பாக்கியை காட்டி மிரட்டிக் கொண்டிருந்த கிறிஸ்சை அவரது 8 வயது குழந்தை அழுது கொண்டே தடுத்தது. அவசர கால டெலிபோனில் ‘ரெக்கார்டு’ ஆனது. அவரது மனைவியும் அழுது கொண்டே என்னை கொன்று விடாதீர்கள் என கெஞ்சியதும் பதிவானது.

அதை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் கிறிஸ் கார்லே எம்.பியை கைது செய்தனர். அவசர கால டெலிபோனில் பதிவான குரலை ஆதாரமாக காட்டினர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response