ஸ்பெஷல்
Now Reading
தி.மு.க. புகார்- சர்ச்சையில் சிக்கிய கமி‌ஷனர் ஜார்ஜ் விரைவில் மாற்றப்படுகிறார்
0

தி.மு.க. புகார்- சர்ச்சையில் சிக்கிய கமி‌ஷனர் ஜார்ஜ் விரைவில் மாற்றப்படுகிறார்

by editor sigappunadaMarch 19, 2017 2:17 pm

சென்னை போலீஸ் கமி‌ஷனராக இருக்கும் ஜார்ஜ் வருகிற 22-ந்தேதி ஐகோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். முன்னாள் கவுன்சிலர் ஒருவர் மீதான வழக்கு ஒன்றில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜாமீன் மனு ஒன்றை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் 2011-ம் ஆண்டு வரை முடிக்கப்படாமலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலும் இருக்கும் வழக்குகளின் நிலை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

நிலுவையில் உள்ள கொடுங்குற்ற வழக்குகளை 2 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும், இந்த வழக்கில் காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகள் பற்றியும், ஐகோர்ட்டு தலைமை பதிவாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி வைத்தியநாதன் கூறி இருந்தார்.

இது தொடர்பான அறிக்கையை 4 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கில் ஐகோர்ட்டு வழங்கி இருந்த கால அவகாசம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கில் நாளை (20-ந் தேதி) கமி‌ஷனர் ஜார்ஜ் ஐகோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டு வழக்குகள் பட்டியலில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி, கமி‌ஷனர் ஜார்ஜை மாற்ற வேண்டும் என்று தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் கமி‌ஷனர் ஜார்ஜ் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

தி.மு.க. புகாரையடுத்து கமி‌ஷனர் ஜார்ஜ் விரைவில் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response