மாவட்டம்
Now Reading
திருப்பதி உண்டியலில் 1018 கோடி ரூபாய் அப்பாடியோவ் !
0

திருப்பதி உண்டியலில் 1018 கோடி ரூபாய் அப்பாடியோவ் !

by editor sigappunadaJanuary 8, 2017 11:10 am

திருப்பதி உண்டியலில் கடந்த ஆண்டை விட 25% அதிகம் காணிக்கை கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் ரூ.1018 கோடி காணிக்கை கிடைத்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் ஏழுமலையானை தரிசிப்பதற்கு 2 கோடியே 66 ஆயிரம் பக்தர்கள் வந்து சென்றுள்ளனர். அவர்கள் மூலம் கோயில் உண்டியலில் ரூ.1018 கோடி காணிக்கை சேர்ந்துள்ளது. இதை கடந்தாண்டு காணிக்கையோடு ஒப்பிடும்போது, 25 சதவிகிதம் அதிகம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதேபோல், இந்தாண்டு, திருப்பதியில் லட்டு விற்பனையும் அமோகமாக நடந்துள்ளது.கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 10 கோடியே 34 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டது. ஒரே ஆண்டில் இந்தளவுக்கு லட்டு தயார் செய்திருப்பது இதுவே முதல்முறை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பண மதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகும் திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கை கடந்த ஆண்டை விட 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மக்கள் பணத் தட்டுப்பாட்டு பிரச்சனையில் இருந்தாலும், டிஜிட்டல் முறையிலும் இ-உண்டியல் மூலமாகவும் காணிக்கை செலுத்தி வந்தனர் என்பது குறிப்பித்தக்கது.

ஜனவரி 1 ஆம் தேதி, புத்தாண்டு அன்று, உண்டியலில் ரூ. 2. 74 கோடி காணிக்கை கிடைத்துள்ளது.

இந்நிலையில், செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகள் அதிகளவில் காணிக்கையாக வந்துள்ளது வேதனையாக இருக்கிறது என தேவஸ்தானம் கூறியது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் 31ஆம் தேதிக்கு பிறகு திருப்பதி கோயில் உண்டியலில் 1. 28 கோடிக்கு பழைய ரூ. 500, 1000 நோட்டுகள் வந்துள்ளன. அவற்றை ரிசர்வ் வங்கியில் மாற்றுவது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response