மாவட்டம்
Now Reading
திருநங்கை பிரித்திகா யாஷினி காவல் உதவி ஆய்வாளராக பொறுப்பேற்பு
0

திருநங்கை பிரித்திகா யாஷினி காவல் உதவி ஆய்வாளராக பொறுப்பேற்பு

by editor sigappunadaApril 3, 2017 10:11 am

சேலம் கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கலை யரசன். இவரது மனைவி சுமதி. இந்த தம்பதியரின் 2 வாரிசுகளில் பிரித்திகா யாஷினி(26) திரு நங்கை ஆவார். பிசிஏ பட்டம் முடித்துள்ள இவர் கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் பணியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்று தேர்வானார்.

காவல் உதவி ஆய்வாளருக் கான ஓராண்டு பயிற்சியை முடித்த பிரித்திகா யாஷினி உள்ளிட்ட 108 பேருக்கு தற்போது காவல் நிலைய பணி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அதில், தருமபுரி மாவட்டத்தில் 15 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் பிரித்திகா யாஷினியும் ஒருவர்.

இவர் நேற்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கங்கா தரை சந்தித்து பணியில் இணைந்த துடன், வாழ்த்து பெற்றார். அவர் உள்ளிட்ட 15 பேரும் எந்தெந்த காவல் நிலையத்தில் பணியாற்று வது என்பது குறித்த உத்தரவு இன்று வழங்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 6 மாதங்கள் காவல் நிலைய பயிற்சிப் பணி முடித்த பிறகு இந்த புதிய உதவி ஆய்வாளர் கள் மீண்டும் வேறு காவல் நிலை யங்களில் பணியமர்த்தப்படுவர்.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response