மாவட்டம்
Now Reading
திருடிய பைக் எரிந்ததால் ராஜ்பவன் அருகே பரபரப்பு
0

திருடிய பைக் எரிந்ததால் ராஜ்பவன் அருகே பரபரப்பு

by editor sigappunadaDecember 2, 2016 12:18 pm

பழவந்தாங்கல், நேரு காலனியை சேர்ந்தவர் சாம் பிரவீன்குமார் (19). பல்லாவரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்தபோது, அவரது பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் சாம் பிரவீன்குமார் புகார் அளித்தார். அப்போது, பைக் திருட்டு நடைபெற்ற இடம் எங்கள் காவல் நிலைய எல்லையில் இல்லை. இதுகுறித்து பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள் என்று சாம் பிரவீன்குமாரை போலீசார் திருப்பி அனுப்பினர். இதைத் தொடர்ந்து பரங்கிமலை குற்றப்பிரிவில் நேற்று முன்தினம் 11 மணியளவில் சாம் பிரவீன்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பைக் காணாமல் போனது குறித்து வயர்லஸ் மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், கிண்டி கவர்னர் மாளிகை அருகே சர்தார் பட்டேல் சாலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் ஒரு பைக்கில் 3 பேர் வேகமாக வந்தபோது, பைக்கின் ஸ்டாண்டை கீழே தட்டிவிட்டு நெருப்பை வரவழைத்ததால் பைக் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, பைக்கை அங்கேயே போட்டுவிட்டு, அதில் வந்த 3 பேரும் தப்பி சென்றனர். தகவலறிந்து கோட்டூர்புரம் போலீசார் விரைந்து வந்து, தண்ணீர் லாரி மூலம் தீயை அணைத்தனர். பின்னர் அந்த வண்டி நம்பரை வைத்து விசாரித்தபோது, அது பழவந்தாங்கல் பகுதியில் திருடப்பட்ட பைக் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பைக்கை திருடி சென்று விபத்தை ஏற்படுத்திய 3 பேரை பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
பிரியாணிக்கான சண்டையால் நின்று போன திருமணம் - பெண் வீட்டார் அசைவ உணவை வழங்காததால் ஏற்பட்ட பிரச்சினையில், மீரட்டின் முஸாஃபர் நகர் கிராமத்தில் நடைபெற இருந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்துத் திருமணப் பெண் நக்மா Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response