அரசியல்
Now Reading
திமுக செயல்தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் தேர்வு!
0

திமுக செயல்தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் தேர்வு!

by Sub EditorJanuary 4, 2017 11:04 am

இன்று சென்னையில்  நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் திமுக செயல்தலைவராக மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான தீர்மானத்தை க.அன்பழகன் முன்மொழிய துரைமுருகன் வழிமொழிந்தார். திமுக-வின் விதி 18-ல் திருத்தம் செய்யப்பட்டு புதிதாக திமுக செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி திமுக தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் திமுக செயல்தலைவருக்கும் உண்டு. அதேசமயம் திமுக பொருளாளர் பதவியிலும் மு.க.ஸ்டாலின் நீடிக்கிறார்.

சூழல் என்னை செயல்தலைவராக்கியுள்ளது என திமுக பொதுக்குழுவில் ஏற்புரை நிகழ்த்திய ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பள்ளிப் பருவத்திலேயே திமுகவில் தனக்கு ஈடுபாடு என உரையாற்றினார். மேலும் பொறுப்புடன் செயல்தலைவராக பணியாற்றுவேன் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக செயல் தலைவராக தேர்வாகியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பொதுக்குழுவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

திமுக செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி தற்போது திண்டுக்கல் நகராட்சி அலுவலக வாயிலில், திமுக நகர கழகம் சார்பில் இனிப்பு வழங்கி வருகின்றனர்.

 

 

 

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response