மாவட்டம்
Now Reading
திமுக – காங்கிரஸ் ஊழல்வாதிகள்: சுப்பிரமணியன் சுவாமி
0

திமுக – காங்கிரஸ் ஊழல்வாதிகள்: சுப்பிரமணியன் சுவாமி

by editor sigappunadaApril 10, 2017 10:38 am

‘காங்கிரஸுடன் சேர்ந்து தேசிய அளவில் திமுக ஊழல் செய்துவிட்டது’ என்று பாஜக-வின் மூத்தத் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

திமுக கட்சியின் வேட்பாளரை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அரசியல் தொடர்பாகவும், தமிழர்கள் பற்றியும் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார் இவர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை கோவை விமான நிலையத்தில் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. தென்னிந்தியாவில் நிலவும் கால நிலையால்தான் மக்களின் நிறம் மாறுபட்டுள்ளது. தருண் விஜய் நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஊழல் செய்கின்றன. இருந்தாலும் காங்கிரஸுடன் சேர்ந்து தேசிய அளவில் திமுக ஊழல் செய்துள்ளது. எனவே, அக்கட்சியின் வேட்பாளரை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பிரியாணிக்கான சண்டையால் நின்று போன திருமணம் - பெண் வீட்டார் அசைவ உணவை வழங்காததால் ஏற்பட்ட பிரச்சினையில், மீரட்டின் முஸாஃபர் நகர் கிராமத்தில் நடைபெற இருந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்துத் திருமணப் பெண் நக்மா Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response