மாவட்டம்
Now Reading
திமுக இளைஞரணி செயலாளராக முன்னாள் அமைச்சர் நியமனம்
0

திமுக இளைஞரணி செயலாளராக முன்னாள் அமைச்சர் நியமனம்

by editor sigappunadaJanuary 6, 2017 12:27 pm

 

திமுக இளைஞரணி செயலாளராக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமனம் செய்யபட்டிருப்பதாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேலாக திமுக இளைஞரணி செயலாளராக இருந்து வந்தவர் மு.க.ஸ்டாலின்.சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் இருக்கும் அவர் , சமீபத்தில் நடைபெற்ற திமுக  பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். எனவே அவர் வகித்து வந்த  கட்சியின் பொருளாளர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் ஆகிய பொறுப்புகள் யாருக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் கடந்த 2006-11 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞசாலை  மற்றும் பராமரிப்பு துறை அமைச்சராக இருந்த வெள்ளகோவில் மு.பெ.சாமிநாதனை அப்பொறுப்புக்கு நியமித்து திமுக தலைமை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response