மாவட்டம்
Now Reading
தினகரன் கைது பற்றி தா. பாண்டியன் கருத்து!
0

தினகரன் கைது பற்றி தா. பாண்டியன் கருத்து!

by editor sigappunadaApril 28, 2017 1:11 pm

இரட்டை இலை வழக்கில் லஞ்சம் கொடுக்க முயன்றவர்களை கைது செய்த போலீசார், வாங்க முயன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயற்ற வழக்கில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனை டெல்லி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ஏப்ரல் 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன்,’ கொடைக்கானலை வனவிலங்கு சரணாலயமாக மாற்றும் முயற்சியைத் கைவிட வேண்டும். தமிழகத்தில் பாஜக பின்வாசல் வழியாக காலுன்ற முயற்சித்து வருகிறது. இது அந்த கட்சித் தலைவர்களின் ஆணவப் பேச்சிலிருந்தே தெரிகிறது.

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் லஞ்சம் வாங்க முயன்றவர்களை மத்திய அரசும், பாஜகவும் அடையாளம் காட்ட முடியாததது ஏன். அவர்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் அதிமுகவில் இரு அணியும் ஒன்றினைந்தால்தான் அவர்களுக்கு நல்லது, இல்லையெனில் மற்றவர்களுக்குத்தான் நல்லது’என்று தெரிவித்தார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response