மாவட்டம்
Now Reading
தான் படித்த கல்லூரியில் சிறப்பு அழைப்பாளரான இளைஞர்
0

தான் படித்த கல்லூரியில் சிறப்பு அழைப்பாளரான இளைஞர்

by editor sigappunadaJanuary 8, 2017 1:09 pm

1439362235-722

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வரும் சுந்தர் பிச்சை, இரண்டு நாட்களுக்கு முன் இந்தியா வந்தார். இந்தியா வந்தவர் கராக்பூரில் உள்ள ஐஐடி கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். பெங்காலில் இருக்கும் கராக்பூர் ஐஐடி கல்லூரியில் தான் சுந்தர் பிச்சை மெட்டலாரிஜிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். அதன்பின் அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தவர், ஆகஸ்ட் 10, 2015ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் 23 வருடங்களுக்குப் பின், தான் படித்த கல்லூரிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்றபோது தன் பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார். உரையாடலின் தொடக்கத்திலே ஹிந்தியில் பேசியவர்களிடம், ‘நான் சென்னைக்காரன், ஹிந்தி தெரியாது’ என்று கூறினார். அவருடைய பதில் இன்னும் மீம்ஸ்களாகவும் ஸ்டேட்டஸாகவும் இணையதளங்களில் உலாவி வருகின்றது. அதன்பின் ஆங்கிலத்தில் தொடங்கிய உரையாடலின்போது, தன் கல்லூரி வாழ்க்கையைப் பற்றிய சுவாரஸ்யங்களைப் பறிமாறிக்கொண்டார். கல்லூரியில் படிக்கும் சமயங்களில் பயந்தவராகவும், கூச்சசுபாவம் கொண்டவராகவும் இருந்ததாக சுந்தர் தெரிவித்தார். அதன்பின் தனது காதல் கதைகள் குறித்தும் சுந்தர் கூறினார்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response