பேட்டி
Now Reading
‘தர்மதுரை’ படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்
0

‘தர்மதுரை’ படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்

by editor sigappunadaJanuary 7, 2017 8:56 pm

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’ படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தர்மதுரை’. யுவன் இசையில் வெளியான இப்படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார். கடந்தாண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.

இப்படக்குழுவினர் இன்று (ஜனவரி 7) ரஜினியை சந்தித்து 100-வது கேடயத்தை வழங்கினர். தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் ரஜினியை சந்தித்தார்கள். இச்சந்திப்பு சுமார் 1 மணி நேரத்துக்கும் அதிகமாக நீண்டது.

அப்போது, அப்படத்தின் சிறப்பம்சங்களைக் கூறி படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார் ரஜினி. இதில் நடித்த நடிகர்களின் இயல்பான நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும், சீனு ராமசாமியின் படங்களில் இருக்கும் சமூக அக்கறையுள்ள தன்மைகளை குறிப்பிட்டுப் பாராட்டினார்.

“’முள்ளும் மலரும்’ – ’காளி’ தந்த பாதிப்பில் சினிமாவில் நுழைந்த எனக்கு ரஜினி சாரை சந்தித்ததும், அவரின் பாராட்டும் தெம்பும் இந்த நாள் தந்த மிக சிறந்த பரிசாக நான் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி.

மேலும், ‘தர்மதுரை’ தலைப்பு அளித்ததால், இப்படத்தின் 100வது கேடயத்தை ரஜினிக்கும் வழங்கி படக்குழுவினர் தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response