அரசியல்
Now Reading
தம்பிதுரையை சந்திக்க மறுத்த பிரதமர்!!!
0

தம்பிதுரையை சந்திக்க மறுத்த பிரதமர்!!!

by Sub EditorJanuary 13, 2017 8:26 pm

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கக்கோரி, டெல்லியில் அ.தி.மு.க எம்.பிக்களின் மனுவை பிரதமர் மோடி பெற்றுக் கொள்ளாத நிலையில், அவர்கள் பிரதமர் அலுவலகத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தலைமையில் மனு அளித்தனர்.

அதன் பின்னர் அதிமுக எம்.பி.க்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். தம்பிதுரை பேசும்போது, “சட்டத்திற்கு உட்பட்டு ஜல்லிக்கட்டை நடத்தவேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை, அதற்காகவே நாங்கள் டெல்லி வந்தோம். பிரதமருக்கு நிறைய அலுவல்கள் இருக்கலாம். அதன் காரணமாக அவர் எங்களை சந்திக்கவில்லை.” என்று கூறினார்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக தம்பித்துரை மேலும் பேசும் போது தமிழகம் அமெரிக்காவிலா உள்ளது? இந்தியாவில் தானே உள்ளது என்று கடுமையாக கூறினார். பிரதமர் தங்களை சந்திக்க வில்லை என்ற கோபத்தை வெளிப்படுத்தியது நன்றாக தெரிந்தது. இது சற்றுநேரம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response