மாவட்டம்
Now Reading
தமிழக எல்லையில் சிறுவர்களுக்குய் ஆயுதபயிற்சி- அதிர்ச்சி
0

தமிழக எல்லையில் சிறுவர்களுக்குய் ஆயுதபயிற்சி- அதிர்ச்சி

by editor sigappunadaJanuary 8, 2017 2:05 pm

தமிழக எல்லையோர கேரள வனப்பகுதியில் முகாமிட்டுள்ள மாவோயிஸ்ட் அமைப்பினர் சிறுவர், சிறுமியருக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கும் வீடியோ வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள தமிழக எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மாவோயிஸ்ட் இயக் கத்தினரின் ஊடுருவல் அதிகமாகி உள்ளது. இதனால் வனத்திலும், மலைக் கிராமங்களிலும் தமிழக போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் போலீஸார் கண் காணிப்பு இருந்தாலும், மாவோ யிஸ்ட் இயக்கத்தினரின் செயல் பாடுகள் சமீப காலமாக அதிகமாகி உள்ளது. அட்டப்பாடி, முள்ளி, வயநாடு ஆகிய இடங்களைத் தளமாகக்கொண்டு இவர்கள் இயங்குகின்றனர். இதனால், கேரள தண்டர்போல்ட் போலீஸாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடக்கிறது.

இந்நிலையில், கேரள வனப் பகுதியில் முகாம் அமைத்துள்ள மாவோயிஸ்ட்கள் தமிழக, கேரள, கர்நாடக மாநில எல்லைகள் சந்திக்கும் முச்சந்திப்பில் முகாம் அமைக்கவும், போலீஸாருக்கு எதிரான தாக்குதல்களை நடத்தவும், பழங்குடி மக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து தங்களுடன் சேர்த்துக்கொள்ளவும் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அது தொடர்பான வீடியோ பதிவு ஒன்று கடந்த டிசம்பரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல, மாவோயிஸ்ட் இயக்கத்தினர் தளம் அமைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதை தெளிவாக விளக்கும் மற்றொரு விடியோ பதிவு தற்போது வெளி யாகியுள்ளது.

தண்டர்போல்ட் போலீஸார் கைப்பற்றியுள்ள இந்த வீடியோ பதிவில் சிறுவர், சிறுமியருக்கு மாவோயிஸ்ட்கள் ஆயுதப் பயிற்சி அளிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தளம் அமைப்பதற்கான பணிகளில் ஈடுபடுவது, கொடி யேற்றுவது கர்நாடக மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் விக்ரம் கவுடா, அந்த முகாமில் பங்கெடுப்பது போன்ற காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

தண்டர்போல்ட் போலீஸாரிடம் இருந்து வெளியாகியிருக்கும் இந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து, தமிழக போலீஸாரும் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response