பேட்டி
Now Reading
தமிழக அரசை மத்திய அரசு இயக்குகிறதா? – பொன்.ராதாகிருஷ்ணன்
0

தமிழக அரசை மத்திய அரசு இயக்குகிறதா? – பொன்.ராதாகிருஷ்ணன்

by editor sigappunadaJanuary 30, 2017 11:41 am

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழக அரசை பின்னால் இருந்து இயக்கும் தேவை மத்திய அரசுக்கு இல்லை என்றும், நல்லது எதுவோ அதை மத்திய அரசு செய்கிறது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், தமிழக அரசை மத்திய அரசு இயக்குகிறதா என்பது குறித்து முதலமைச்சர்தான் பதில் கூற வேண்டும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சிலரால் பிரிவினைவாத கோஷங்கள் எழுப்பப்பட்டதால், மாணவர்கள் இனி  ஒன்றுகூடுவதற்கு சிந்திப்பார்கள் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

போராட்டத்தில் தேசவிரோத சக்திகள் ஊடுருவியதை மாணவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று கூறிய அவர்,  மாணவர் போராட்டத்தை தேசவிரோத சக்திகள் கேடயமாக பயன்படுத்திக்கொண்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response