மாவட்டம்
Now Reading
தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும் – முதல்வர் ஓ.பி.எஸ். தகவல்
0

தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும் – முதல்வர் ஓ.பி.எஸ். தகவல்

by editor sigappunadaJanuary 10, 2017 7:35 pm

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வறட்சியால் பயிர்கள் கருகியதைப் பார்த்து மனவேதனை அடைந்த பல விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போன விரக்தியில் தற்கொலை செய்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் நியமித்த குழுக்கள், தமிழகம் முழுவதும் உள்ள கள நிலவரத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும். விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுமையாக ரத்து செய்யப்படும். பயிர்க்கடனை மத்திய கால கடனாக மாற்றியமைக்க வழிவகை செய்யப்படும்.

100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த கோரிக்கை முன்வைக்கப்படும். வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். அந்த வகையில் நெற்பயிர்கள் பாதிப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு 5465 ரூபாய் வழங்கப்படும்.  மானாவரி பயிர்கள் பாதிப்புக்கு ஏக்கருக்கு 3000 வழங்கப்படும்

நீண்டகால பயிர்கள் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.7287, பயறு வகைகளுக்கு ரூ.12000, சோளத்துக்கு ரூ.20000, கரும்புக்கு ரூ.45000, மஞ்சளுக்கு ரூ.50000 என இழப்பீடு வழங்கப்படும.

காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்படும். காப்பீட்டுக்கான  களப்பணி விரைந்து தொடங்கப்படும். வறட்சி நிவாரணக் கோரிக்கை மனு விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response