அரசியல்
Now Reading
தமிழகம் முழுவதும் வரும் 22ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு
0

தமிழகம் முழுவதும் வரும் 22ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

by editor sigappunadaFebruary 19, 2017 3:23 pm

தமிழக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதையும், விதிகளுக்கு புறம்பாக நிறைவேற்றிய ஜனநாயக படுகொலையையும் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் வரும் 22-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவையில் அதிமுகவினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை தீர்மானம் அவை மரபுகளுக்கு மாறாக நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.

திமுக உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தி, கூண்டோடு வெளியேற்றப்பட்டதற்கும், சட்டப்பேரவை விதிகளுக்கு புறம்பாக நிறைவேற்றிய ஜனநாயக படுகொலையை கண்டித்தும் தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் வரும் 22-ம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே,செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், பேரவை நிகழ்வுகள் குறித்து குடியரசு தலைவரிடம் புகார் அளிக்க உள்ளதாக கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response