மாவட்டம்
Now Reading
தமிழகத்துக்கு வறட்சி நிவாரணம்: டெல்லியில் ஆலோசனை!
0

தமிழகத்துக்கு வறட்சி நிவாரணம்: டெல்லியில் ஆலோசனை!

by editor sigappunadaMarch 21, 2017 12:47 pm

தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில், தொடர்ந்து ஏழு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மண்டை ஓட்டை மாலையாக அணிந்து போராட்டம், பிச்சை எடுக்கும் போராட்டம், தூக்குக்கயிறு போராட்டம் என்று ஒவ்வொரு நாளும் ஒரு புதுவிதமான போராட்டம் நடத்தி, நாட்டின் ஒட்டுமொத்த ஊடகங்களையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். தவிர்க்கவே முடியாமல் அதிமுக-வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்பிதுரை தலைமையில் நேரில் சென்று தமிழக விவசாயிகளைச் சந்தித்தனர். அவர்களிடம், ‘தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். தென்னக நதிகளை இணைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

விவசாயிகளின் கோரிக்கையைக் கேட்ட அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையை அரசிடம் தெரிவித்து பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளனர். இதையடுத்து பாஜக-வின் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் மத்திய வேளாண்மை அமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து தமிழக விவசாயிகள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், டெல்லியில் மார்ச் 23இல் தமிழகத்துக்கு வறட்சி நிவாரணம் வழங்குவது குறித்து முடிவெடுக்க உயர்நிலைக்கூட்டம் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராதா மோகன்சிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response