உலகம்
Now Reading
தமிழகத்தில் விவசாயிகளையும், ஜல்லிக்கட்டையும் காப்பாற்ற சிங்கப்பூரில் போராட்டம்!
0

தமிழகத்தில் விவசாயிகளையும், ஜல்லிக்கட்டையும் காப்பாற்ற சிங்கப்பூரில் போராட்டம்!

by Sub EditorJanuary 19, 2017 12:48 pm

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், என பல தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் ஏறத்தாழ அனைத்து மாவட்டங்களிலும், கடல் கடந்து தமிழர்கள் வசிக்கும் இலங்கை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், என  உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் போராட துவங்கியுள்ளனர்.

சிங்கப்பூரில் இன்று அனைத்து தமிழர்களும் ஹாங்க் லிம் பார்க் பகுதியில் அனைவரும் கூடுமாறு வாட்ஸ்அப் மூலம் தகவல் பகிரப்பட்டு வருகிறது. இரவு 7 மணிக்கு அனைவரும் கூடுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் எவ்வித கோஷங்களும் எழுப்பாமல் அமைதியாக போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயிகளையும், ஜல்லிக்கட்டையும் காப்பாற்ற நடக்கும் இந்த போராட்டத்திற்கு அனுமதி வாங்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமைதியாக நடக்கும் இந்த போராட்டத்தில் நண்பர்கள், குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இந்த போராட்டத்திற்கு சிங்கப்பூர் குடிமகன்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். போராட்டத்தில் பங்கேற்க வருபவர்கள் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். தண்ணீர் மற்றும் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response