மாவட்டம்
Now Reading
தமிழகத்தில் செயல்படாத நிறுவனங்கள் 15,352
0

தமிழகத்தில் செயல்படாத நிறுவனங்கள் 15,352

by editor sigappunadaDecember 11, 2016 4:35 pm

வர்த்தகம் புரியாமல், வரவு – செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்யாமல் உள்ள நிறுவனங்கள், செயல்படாத நிறுவனங்கள் பிரிவில் சேர்க்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த அக்டோபர் நிலவரப்படி, செயல்படாத நிறுவனங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் தமிழகத்தில் செயல்படாத நிறுவனங்களின் எண்ணிக்கை 15,352 என்றும் மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் லோக்சபாவில் கூறியுள்ளார்.

“இரண்டு நிதியாண்டுகளாக அதாவது, கடந்த 2014 – 15 மற்றும் 2015 – 16ஆம் நிதியாண்டுகளில் செயல்படாத நிறுவனங்கள் எண்ணிக்கை முறையே 1,39,373 மற்றும் 1,38,691 ஆக இருந்தது. கடந்த அக்டோபர் நிலவரப்படி செயல்படாத நிறுவனங்கள் எண்ணிக்கை 1,38,410 ஆக குறைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், செயல்படாத நிறுவனங்கள் பிரிவில் இருந்து 4,000 நிறுவனங்கள் வெளியேறி உள்ளன. மகாராஷ்டிராவில்தான், செயல்படாத நிறுவனங்கள் அதிகம் உள்ளன. அங்கு 33,598 நிறுவனங்கள் இப்பிரிவில் இடம் பெற்றுள்ளன. அடுத்த இடங்களில் டெல்லி – 28,066, தெலங்கானா – 17,133, தமிழகம் – 15,352, குஜராத் – 10,793 ஆகியவை உள்ளன”. இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response