மாவட்டம்
Now Reading
தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் ரூ.2,096 கோடி!
0

தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் ரூ.2,096 கோடி!

by editor sigappunadaMarch 22, 2017 4:22 pm

தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில், தமிழக விவசாயிகள், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். தென்னக நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 7 நாட்கள் போராடினார்கள்.

பின்னர், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜகவின் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திர அரசிடம் தெரிவிக்க மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கை சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததன் பேரில் விவசாயிகல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.

இதையடுத்து தமிழகத்துக்கு வறட்சி நிவாரணம் வழங்குவதற்காக ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று மத்தி அரசு அறிவித்தது. இந்நிலையில், இன்று தமிழகத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.2 ஆயிரத்து 96 கோடி வழங்க வறட்சியை ஆய்வு செய்த மத்திய குழு பரிந்துரை செய்துள்ளது

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response