சினிமா
Now Reading
தனுஷ் -விஜய் சேதுபதி மோதல் வெடித்தது.
0

தனுஷ் -விஜய் சேதுபதி மோதல் வெடித்தது.

by editor sigappunadaJanuary 7, 2017 6:55 pm

 

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘புரியாத புதிர்’ பொங்கல் அன்று திரைக்கு வருகிறது. இந்த படம் தவிர ‘கவண்’, ‘விக்ரம்-வேதா’, ‘அநீதி கதைகள்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கும் ‘வட சென்னை’ படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் தனுஷின் கால்ஷீட் பிரச்னை காரணமாக படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் தனுஷுக்காக காத்திருப்பதால் இப்படத்துக்கு விஜய் சேதுபதி பலமுறை கால்ஷீட் கொடுத்தும் அவரின் தேதிகள் வீணாகிவிட்டதால், இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக கூறப்படுகிறது. தனுஷின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த வெற்றிமாறன் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் இருக்கிறார். இந்தtஹ் திரைப்படத்தை ஏ.எல்.விஜயிடம் பணிபுரிந்த சங்கர் மற்றும் குணா ஆகியோர் இயக்கவுள்ளனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response