தலையங்கம்
Now Reading
தனியாக வசிப்பது ஆபத்தா?
0

தனியாக வசிப்பது ஆபத்தா?

by editor sigappunadaNovember 1, 2016 12:19 pm

சாந்தி என்ற 65 வயது பெண்மனி சென்னை தி.நகரில் நேற்று கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லையென்றாலும், பணம், நகைக்காகத்தான் இந்தக் கொலை நடந்திருக்கும் என்பதை பாமரனும் கூறி விடுவான்.

இதுபோன்ற கொலைகள் பத்து, இருபது என்று எண்ணிக்கை நீண்டு கொண்டிருப்பது அரசு பெருமை அல்ல என்பதை உணரவேண்டும்.

ஒரு மனிதன் தனியாக, சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத நிலை இருந்தது போய், தனியாக வீட்டில் கூட வசிக்க முடியாத நிலை உருவாகி வருவது பெரும் ஆபத்து.

இதனால் தனியாக வசிக்கும் முதியவர்கள் எப்போதும் அச்சத்துடனேயே வாழும் நிலை இருந்து வருகிறது.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீசார் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தாமல் இருப்பது வேதனைக்குரியது.

தனியாக வசிக்கும் முதியவர்கள் குறித்த தகவல்களை உடனடியாக திரட்டி அந்தந்த பகுதிகளில் அவப்போதாவது போலீசார் ரவுண்ட்ஸ் வரலாம்.

இப்படி செய்வதால் கொள்ளையர்களுக்கு ஓரளவுக்காவது பயமிருக்கும்.

கொள்ளையடிக்க வரும் கொள்ளையர்களே கொலைக்காரர்களாக மாறுகின்றனர். கொள்ளையை தடுத்தாலே கொலை குறைய வாய்ப்பிருக்கிறது.

தமிழக காவல்துறை துரிதமாக செயல்பட வேண்டிய நேரமிது.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response